மத்திய மற்றும் மாநில அரசு சின்னங்களை தவறாக உபயோகப்படுத்துபவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். பதவியில் இல்லாத முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசு சின்னத்தை எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்தக்கூடாது. அதை மீறிப் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி கூறியுள்ளார்.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதிகள், அதிகாரிகள், தங்களின் வாகனம் விசிட்டிங் கார்டுகள், லெட்டர் பேடுகளில் அரசு சின்னங்களை உபயோகப்படுத்தக் கூடாது. இந்த சட்டங்களை மீறுபவரின் மீது காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.