இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் வீடியோ கால், குரூப் சேட் உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளதால் அனைவருக்கும் ஒரு முக்கிய அங்கமாக இது மாறிவிட்டது என்றே கூறலாம். இந்த செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்ற நிலையில், அதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க சில சிறப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அதன்படி, பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்தியாவில் ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பிற மாநில மொழிகளில் வாட்ஸ்அப் செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒரியா, உருது ஆகிய மொழிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தலாம். அதனால் குறைவாக படித்த மக்கள் கூட இந்த சேவையின் சேவையை பயன்படுத்தலாம். இந்த புதிய சேவையின் படி வாட்ஸ்அப் எப்போதும் போல சேவைகள் இருக்கும். ஆனால் அவற்றின் தலைப்புகள் மாநில மொழிகளில் காட்டப்படும்.
ஆனால் நாம் எந்த மொழியில் செய்தியை அனுப்புகிறோமோ அதே மொழியில் தான் தகவல்களும் இருக்கும். இந்த வசதியை பெற வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். அதன் பின்னர் வலது மேல் பகுதியில் உள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்து, பின் செட்டிங் சூஸ் ஆப் – சாட்ஸ்- சூஸ் ஆப் லாங்குவேஜ் சென்று அதில் உள்ள 10 மொழிகளில் நமக்கு தேவையான ஒரு மொழியை தேர்வு செய்ய வேண்டும். இந்த சேவையை பல நாடுகளில் ஆண்ட்ராய்ட் போன்களில் 60 மொழிகளிலும், ஐபோனில் 40 மொழிகளிலும், வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் இந்த புதிய சேவையை பல தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.