Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

15 அம்ச கோரிக்கைகள்…. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினரின் ஆர்ப்பாட்டம்…!!

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தேவூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் கீழ்வேளூர் வட்டார தலைவர் தலைமையிலும், வட்டார துணை செயலாளர் முன்னிலையிலும் நடைபெற்றுள்ளது. இதில் கல்வி மாவட்ட செயலாளர், வட்டார துணை செயலாளர், வட்டார துணை தலைவர்கள், வட்டார பொருளாளர், முன்னாள் வட்டார நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், உயர்கல்விக்கான ஊக்கத்தொகை உயர்வினை மீண்டும் வழங்க வேண்டும் என்றும், கீழ்வேளூர் பகுதியிலிருந்து தேவூருக்கு மாற்றப்பட்டிருந்த வட்டார கல்வி அலுவலகத்தை மீண்டும் கீழ்வேளூருக்கே கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |