ஜார்கண்ட் மாநிலத்தில் தள்ளுபடி விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அந்த மாநிலத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 25 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும். ஒரு மாதத்திற்கு 10 லிட்டர் பெட்ரோல் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். இந்த சலுகையை பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம். அதற்காக ஜார்க்கண்ட் அரசு தனி மொபைல் ஆப்பையும் அறிமுகம் செய்துள்ளது.
குடியரசு தினம் முதல் மானிய விலையில் பெட்ரோல் விற்பனை ஜார்கண்ட் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது. லைசன்ஸ் இல்லாதவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி வரை பெட்ரோல் வழங்கப்படும். பெட்ரோல் விலை ஆல் பொதுமக்கள் கடும் சுமையை சந்தித்து வரும் நிலையில், மக்களின் சுமையை குறைக்க அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.