Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாலிபரை தனியாக வரவழைத்து…. கொலைமிரட்டல் விடுத்த கும்பல்…. 3 பேர் மீது வழக்குபதிவு….!!

முன்பகை காரணமாக வாலிபரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள உசேன் ராவுத்தர் தெருவில் தாரிக் உசேன் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவருக்கும், கூடலூரை சேர்ந்த லெனின் என்பவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு லெனின் தாரிக் உசேனை தொடர்புகொண்டு கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பயணியர் விடுதி அருகே வருமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த தாரிக் உசேனை லெனின் மற்றும் அவரது கூட்டாளிகள் சரமாரியாக தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தாரிக் உசேன் கூடலூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் லெனின், ராஜா உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |