Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 25 தள்ளுபடி…. இது எப்படி இருக்கு…..!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் ஏழ்மை நிலையில் இருக்கின்ற பிங்க் மற்றும் பச்சை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 ரூபாய் தள்ளுபடி வழங்குவதாக அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்காக ஒரு மாதத்திற்கு 10 லிட்டர் வரை இந்த மானியம் வழங்கப்படும்

இதன் காரணமாக 20 லட்சம் குடும்பங்கள் பயன் அடைவார்கள். இதற்கு தனி மொபைல் ஆப் அறிமுகமாகி இருக்கிறது. இந்த நடைமுறை ஜனவரி 26-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. “திராவிட மாடல்” தமிழகமும் இதை பரிசீலிக்கலாமே என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |