லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களை குறிவைத்து தற்போது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வரும் நிலையில் அவருக்கு சொந்தமான 57 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி கே.பி அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன் மற்றும் சந்திரமோகன் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கூறியிருப்பதாவது,
“முன்னாள் உயர் கல்வி துறை அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் ரைட் நடத்தப்படுவது அதிமுக நிர்வாகிகளின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கமாகும். மேலும் இது மக்களின் கவனத்தை திசை திருப்பி விடும் செயலாகும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..! மு. க ஸ்டாலின் சட்ட மன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த தயாராக உள்ளாரா..?? இதற்கெல்லாம் நாங்கள் பயந்து விடமாட்டோம்.! லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன்.எனது வீட்டிலும் வந்து சோதனை நடத்தட்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.