Categories
தேசிய செய்திகள்

OMG: யூடியூப்பிற்கு தடையா?…. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி…..!!!!!

யூடியூபில் எவ்வளவு நன்மை தரும் விஷயங்கள் இருக்கிறதோ அதே அளவு அதை விடவும் அதிகளவு தீமை பயக்கும் விஷயங்களும் இருக்கின்றன. அதாவது, தவறான வீடியோக்கள் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரசுக்கு எதிராக சர்ச்சை கருத்துகளை வைப்பவர்களையும், வரம்புக்கு மீறி பேசும் நபர்களையும், இந்திய இறையான்மையை சீர்குலைக்கும் வகையில் கருத்துகளை பதிவிடுவோரையும் கைது செய்யும் நடவடிக்கை நடந்து வருகிறது. தீங்கு விளைவிக்கும் நோக்கில் அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்தி வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் யூடியூப் தொடர்பான வாதங்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிகழ்ந்துள்ளது. அப்போது யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்க கூடாது என்ற கேள்வி உயர்நீதிமன்றத்தில் எழும்ப பலரும் திகைத்து நின்றனர். ஆகவே தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா என்றும் அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மேலும் யூடியூபில் வருகிற தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் யூடியூப்பில் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பின்பு, சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தது.

Categories

Tech |