Categories
தேசிய செய்திகள்

முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை… வெளியான புதிய தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் கேரள மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அமெரிக்காவிலிருந்து முதல் மந்திரி பினராயி விஜயன் ஆன்லைன் மூலமாக கலந்துகொண்டார். இதையடுத்து அந்த கூட்டத்தில் பேசிய அவர், கேரளாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. அதாவது பரிசோதனை செய்யப்பட்டவர்களில் பாதி பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று கேரளாவில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால் மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை. மேலும் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் தேவையான கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |