பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ராஜு அதன்பிறகு முதன்முறையாக டுவிட் செய்துள்ளார்.
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜு ஜெயமோகன் என்பவர் வென்றுள்ளார். இவர் இயக்குனர் பாக்யராஜ் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியவர். அதனைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் காலேஜ் சீசன்2, என்ற நாடகத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதிகண்ணம்மா போன்ற சீரியல்களிலும் நடித்தார். மனிதன், துணை முதல்வர், நட்புன்னா என்னன்னு தெரியுமா, மற்றும் சிவகார்த்திகேயனின் டான் போன்ற படங்களிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
https://twitter.com/RajuJayamohan/status/1483437008722833413
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சக போட்டியாளர்களுடன் அன்பாக பழகி வந்தார். இதனால் ஆரம்ப முதலே இவருக்கு பெரும் ஆதரவு இருந்து வந்தது. தொடர்ந்து மக்களின் ஆதரவால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக ட்விட் செய்துள்ளார். அதில் “தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ..!” என கூறியுள்ளார். மற்றும் தனது மனைவி மற்றும் அம்மா உடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.