அப்போது நான் வெற்றி பெற்றேன் இப்போது தோல்வியை தழுவியுள்ளேன் என ரஜினி கண்ணீர் மல்க கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 17ம் தேதி இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பெரிய அளவில் பாதித்துள்ளது. ஐஸ்வர்யா “தனுசைதான் திருமணம் செய்து கொள்வேன்.’ என கூறியபோது, ரஜினி வேண்டாம் என்று தடுத்ததாக பேசப்படுகிறது. ஆனால் தொடர்ந்து ஐஸ்வர்யா பிடிவாதமாக இருந்ததால் ரஜினி குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் விவாகரத்தின் போது ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் கருத்து வேறுபாடால் பிரியவிருப்பதாக ரஜினியிடம் கூறியுள்ளனர். அப்போது ரஜினி இருவரிடமும் பேசி சமாதானப் படுத்தியதாக கூறபடுகிறது.
இதுகுறித்து, “ரஜினி அப்போதே நான் இருவரிடமும் பேசி சமாதானப்படுத்தினேன். உங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள் அவர்களைப் பற்றியும் கொஞ்சம் யோசியுங்கள் என்று கூறினேன். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் சமாதானம் அடைந்து சேர்ந்து வாழ்ந்தார்கள். இல்லை என்றால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பிரிவு நிகழ்ந்திருக்கும்..! அப்போது பேசி அவர்களை பிரிய விடாமல் செய்தேன் என்னுடைய பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது..! தற்போது என்னுடைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.” என சோகமாக கூறியதாக ரஜினியின் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.