Categories
உலக செய்திகள்

“சபாஷ்!”…. முதல் முறையாக தமிழருக்கு…. அயல்நாட்டில் கிடைத்த அந்த பெருமை?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டணம் என்ற பகுதியை சேர்ந்த அன்வர் சாதக் ஆரம்பத்தில் அங்கு சாதாரண கணக்கராக வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களை ஆரம்பித்து தற்போது அனைவரும் வியந்து பார்க்கும் விதமாக வெற்றிகரமான தொழிலதிபராக மாறியுள்ளார்.

இந்நிலையில் அமீரக அரசு அவருடைய சாதனையை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக அவருக்கு கோல்டன் விசா வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை பிரபலங்களுக்கு மட்டுமே “கோல்டன் விசா” வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம் தொழிலதிபருக்கு தற்போது முதல் முறையாக “கோல்டன் விசா” வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |