Categories
உலக செய்திகள்

“இப்படியும் பணம் சம்பாதிக்கலாம்?”…. ஒரே இரவில் கோடி கோடியாக…. கல்லூரி மாணவருக்கு அடித்த ஜாக்பாட்….!!!!

இந்தோனேசியாவில் உள்ள செமராங் என்ற பகுதியில் வசித்து வரும் சுல்தான் குஸ்டாஃப் அல் கோசாலி ( வயது 22 ) என்ற கல்லூரி மாணவர் கடந்த ஐந்து வருடங்களில் எடுக்கப்பட்ட சுமார் 1,000 செல்ஃபிக்களை NFT-களாக மாற்றி பின்னர் ‘Opensea’ சந்தையில் விற்பனை செய்துள்ளார்.

இதன் மூலம் அந்த கல்லூரி மாணவருக்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் கிடைத்துள்ளது. அதாவது 18 முதல் 22 வயதிற்கு உட்பட்ட காலகட்டத்தில் கோசாலி தினமும் தனது கணினியின் முன் நின்றும் அல்லது அமர்ந்தும் எக்கச்சக்கமான செல்ஃபிகளை எடுத்துள்ளார்.

பின்னர் கல்லூரி படிப்பு முடிந்த பிறகு கோசாலி அந்த செல்ஃபி படங்களை NFT-களாக மாற்றி ‘ஓபன் சி’ மார்க்கெட்டில் மூன்று டாலருக்கு விற்பனைக்காக வெளியிட்டார். ஆனால் அவர் கனவில் கூட நினைத்து பார்க்காத அளவிற்கு ஒரே இரவில் அவர் வெளியிட்ட செல்ஃபி கிட்டத்தட்ட 10,41,325 டாலருக்கு ( இந்திய மதிப்பில் ரூ.7.7 3 கோடிக்கு ) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |