பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கோ தீவு நாட்டில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த நாட்டில் பல தீவுகள் உள்ளது. அதேபோல் கடலுக்கு அடியில் சில எரிமலைகளும் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த நாட்டிலுள்ள ஒரு தீவில் அமைந்துள்ள “ஹுங்கா டோங்கோ” என்ற எரிமலையானது கடலுக்கு அடியில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி அந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் சுனாமி அலைகள் கடலில் உருவானது. மேலும் அந்நாட்டின் உள்ள பல்வேறு பகுதிகளுக்குள்ளும் சுனாமி அலைகள் புகுந்தது.
அதோடு மட்டுமில்லாமல் இந்த சுனாமியால் எரிமலைக்கு அருகாமையில் உள்ள மங்கோ தீவு, நமுகா தீவு, ஃப்னொய்புவா தீவு ஆகிய தீவு பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக 50 மக்கள் மட்டுமே வசித்து வரும் “மங்கோ தீவு” அடியோடு அழிந்துவிட்டது. அதாவது சுனாமி அலைகள் கிட்டத்தட்ட 15 மீட்டர் உயரத்திற்கு எழுந்ததால் மங்கோ தீவில் உள்ள அனைத்து வீடுகளும் தரைமட்டமானது.