ஆதார் கார்டு என்பது இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமான ஆவணம். இன்று இருக்கும் சூழலில் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் வெளிச்சந்தையில் கிடைக்கும் ஆதார் பிவிசி கார்டுகள் செல்லாது என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருதி வெளிச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ஆதார் பிபிசி கார்டுகளை வாங்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இருந்தாலும் ஆதார் பிவிசி கார்டு தேவைப்படுவோர், நேரடியாக ஆதார் ஆணையத்திடம் விண்ணப்பித்து அதிகாரபூர்வமாக பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்து ஆதார் ஆணையம், வெளிச் சந்தைகளில் விற்பனையாகும் பிபிசி/பிளாஸ்டிக் ஆதார் கார்டுகள் செல்லாது. வெளிச்சந்தை பிவிசி ஆதார் கார்டுகளை நாங்கள் ஊக்குவிப்பதில்லை. 50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதார் பிவிசி கார்டு அதிகாரபூர்வமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் பிவிசி ஆதார் கார்டு பெற விரும்புவோர் ஆதார் இணையதளத்திற்கு சென்று அதிலுள்ள “order aadhaar PVC card” பிரிவில் 12 இலக்க ஆதார் எண் பதிவிட்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம். 50 ரூபாய் கட்டணம் செலுத்தினால் ஸ்பீடு போஸ்ட் வழியாக நேரடியாக உங்கள் வீட்டிற்கே அனுப்பப்படும்.