இங்கிலாந்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பயிற்சி பெற்ற விமானி ஒருவர் கொரோனா காலகட்டத்தில் யூடியூப்பை பார்த்து சொந்தமாக 4 பேர் பயணிக்கும் விமானம் ஒன்றை உருவாக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் அசோக் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பயிற்சி பெற்ற விமானியாக திகழ்கிறார்.
இந்நிலையில் அசோக் கொரோனா காலகட்டத்தில் யூடியூப்பை பார்த்து தன் மனைவியுடன் சேர்ந்து 4 பேர் பயணிக்கும் வகையிலான விமானம் ஒன்றை சொந்தமாக உருவாக்கியுள்ளார்.
இதற்கான பாகங்களை அசோக் தென்னாப்பிரிக்காவிலிருந்து வாங்கியுள்ளார்.