அமெரிக்காவில் 5G மொபைல் சேவை தொடங்கயிருக்கும் நிலையில் இந்தியாவிலிருந்து செயல்படுத்தப்படும், ஏர் இந்தியாவின் சில விமானங்கள் தற்காலிகமாக செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க நாட்டில் 5G மொபைல் சேவை தொடங்கப்படவிருந்தது. இந்நிலையில், மொபைல் சேவை அலைக்கற்றைகள் மூலமாக, விமானத்தின் சேவையில் பாதிப்பு ஏற்படும். மேலும் விமானத்தில் இருக்கும் அதிநவீன பாதுகாப்பு கருவிகளுக்கும் பாதிப்பு உண்டாகும் என்று விமான நிறுவனங்கள் குற்றச்சாட்டுகள் வைத்தது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம், 5ஜி சேவையால் ஏற்படும் பாதிப்பால் அமெரிக்க நாட்டுடனான, தங்களின் விமான சேவை, புதன்கிழமையிலிருந்து குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது அல்லது மாற்றியமைக்கப்படும் என்று கூறியிருக்கிறது.
இது மட்டுமில்லாமல் 5ஜி சேவை, விமான போக்குவரத்தில் அதிக விளைவுகளை உண்டாக்கும் எனவும், சுமார் 12 லட்சம் பயணிகளை அது பாதிக்க செய்யும் எனவும் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் கூறியிருக்கிறது. குறைந்தபட்சம் 15 ஆயிரம் விமான சேவைகள், 40-க்கும் அதிகமான விமான நிலையங்களில் இருக்கும் சரக்கு போக்குவரத்து சேவையும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.