Categories
அரசியல்

“வரலாறு மறந்துருச்சா….? இல்ல வரலாற்ற மாத்த முயற்சி செய்றீங்களா”….! திமுகவை சாடிய ஓபிஎஸ்….!!!

எம்ஜிஆர் பிறந்த நாளன்று திமுகவினர் பேசியதை ஓ பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

எம்ஜிஆர் பிறந்த நாளன்று திமுக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார் பன்னீர்செல்வம். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “திமுக அரசுக்கு வரலாறு மறந்து விட்டதா..? அல்லது வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறார்களா..! என தெரியவில்லை. வரலாறு படைத்தவர்களுக்கு மத்தியிலேயே அவர்கள் இவ்வாறு பேசுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பிறந்த நாளில் திமுக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கலைஞர் கருணாநிதி எழுதிய கதை திரைக்கதை வசனம் இடம் பெற்ற படங்களில் நடித்து தான் எம்ஜிஆர் புகழின் உச்சிக்கு சென்றார் எனவும், அவருக்கு புரட்சி நடிகர் என்று பட்டம் கொடுத்தது கருணாநிதி என்றும் அதுவே பின்னாட்களில் புரட்சித்தலைவர் என மாறியது என்றும் திமுகவினர் கூறியுள்ளனர்.

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் பெற்ற மாபெரும் வெற்றி அவருக்கு புரட்சி தலைவர் என்ற பட்டத்தை வாங்கிக் கொடுத்தது. இது தெரியாத திமுக அரசு என்னென்னவோ கூறிக்கொண்டு அலைகிறது..!! மேலும் சென்னையில் கிண்டியில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதிதான் அந்த பெயரை சூட்டினார் என திமுகவினர் கூறி வருகின்றனர். இது மிகவும் அப்பட்டமான பொய். உண்மையை இவ்வாறு திரித்து எழுதும் திமுக அரசுக்கு நான் என்ன கூறவென்று கூட எனக்கு தெரியவில்லை..! இயற்கையிலேயே அனைவரையும் ஈர்க்கும் வசீகரிக்கும் தன்மை கொண்டவர் டாக்டர் எம்ஜிஆர். ” நீ முகம் காட்டினால் 30 லட்சம் வாக்குகள் நிச்சயம்..!” என பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர் எம்ஜிஆர். மேலும் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வாங்கிய பெருமை இவரையே சேரும்.

நாடாளுமன்ற வளாகத்துக்கு உள்ளேயே எம்ஜிஆருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. கிண்டி மருத்துவ கல்லூரிக்கு எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்ட போது அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த பல்கலைக் கழகத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்பட்டு சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டது. அப்போது டாக்டர் “எம்ஜிஆர் பல்கலைக்கழகம் மெட்ராஸ்.” என பெயர் சூட்டப்பட்டது. வரலாறு இவ்வாறு இருக்க திமுக அரசு இத்தனையையும் மாற்றி பேசுகிறது மிகவும் கண்டனத்துக்குரியது..!” என கூறியுள்ளார்.

Categories

Tech |