Categories
மாநில செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்…. உடனே 104-க்கு போன் பண்ணுங்க…. அமைச்சர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கிய பகுதியாக வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கொரோனா மட்டுமல்லாமல் பிற நோயிலிருந்து மக்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்.

தமிழகத்தில் 25 ஆயிரம் கிராமங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. நகர்புறங்களில் 28 தெருக்களில் கொரோனா பரவியுள்ளது. சென்னையிலிருந்து சுமார் 8 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர். அதனால் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. ஆனால் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. தற்போது மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு கூடுதல் கட்டணம் குறித்து எந்த புகாரும் இல்லை. அவ்வாறு புகார்கள் இருந்தால் 104 என்கின்ற எண்ணுக்கு மக்கள் அழைக்கலாம். கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து 104 என்ற எண்ணில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |