நடிகர் ஜெய் தனது பெயரை மாற்றப்போவதாக அறிவித்துள்ளார்.
விஜய் நடித்த “பகவதி” படத்தில் அறிமுகமானவர் நடிகர் ஜெய்.தொடர்ந்து ‘சென்னை 28,கோவா , எங்கேயும் எப்போதும்,சுப்புரமணியபுரம்’ போன்ற பல படங்களை நடித்தார்.சமீபத்தில் கேப்மாரி என்ற அடல்ட் படத்தில் நடித்தார்.இப்போது சூப்பர் ஹீரோ கதையை கொண்டு உருவாகும் பிரேக்கிங் நியூஸ் போன்ற சில படங்களில் நடித்து வருகிறார்.நீண்ட காலமாக இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாயின.ஆனால் அவர் எங்கும் அதை சொன்னதில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இது பற்றி முதன்முதலாக கூறியிருக்கிறார்.அதில் அவர் நான் 7 ஆண்டுகளாக இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகிறேன்.ஏதோ ஒரு இனம் பிரியாத நம்பிக்கை.மதம் மாறினாலும் இன்னும் பெயரை மாற்றவில்லை.இனி அஜீஸ் ஜெய்யாக மாறலாம் என முடிவு செய்து உள்ளேன் என கூறியுள்ளார்.