Categories
மாநில செய்திகள்

“தேசிய கலை திருவிழா போட்டி”…. பரிசை தட்டி தூக்கிய தமிழக பள்ளிகள்…. குவியும் பாராட்டு….!!!!!

பள்ளி மாணவ-மாணவிகளின் கலை திறன்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய கலாசார பிரிவு சார்பாக தேசிய அளவில் கலை திருவிழா போட்டிகளானது நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்க்ளுக்கு முதல் பரிசாக தங்க பதக்கத்துடன் 25 ஆயிரம் ரூபாய், 2-ம் பரிசாக வெள்ளி பதக்கத்துடன் 20 ஆயிரம் ரூபாய், 3-ம் பரிசாக வெண்கல பதக்கத்துடன் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் தமிழகத்திலிருந்து 5,000க்கும் மேலுள்ள பள்ளிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். வாய்ப்பாட்டு, இசை, நடனம் என்று மொத்தம் 9 நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

இதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவிலான போட்டியானது ஆன்லைன்’ மூலம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றவர்கள் இம்மாதம் 3ஆம் தேதி சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் நடைபெற்ற ஆன்லைன் வழி போட்டியில் பங்கேற்றனர். இந்த நிலையில் கலா உத்சவ் போட்டிக்கான பரிசுகளை மத்திய அரசானது அறிவித்துள்ளது. அதாவது 9 வகை போட்டிகளில் 27நபர்கள்  பரிசு பெற்றுள்ளனர். அவர்களில் 7 பேர் தமிழக பள்ளி மாணவர்கள். தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி 10ம் வகுப்பு மாணவர் சரண் உள்நாட்டு பொம்மை மற்றும் விளையாட்டு பிரிவில் 3-ம் பரிசு பெற்றுள்ளார்.

மேலும் அதே போட்டியில் மாணவியர் பிரிவில் 3-ம் பரிசை ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி பிளஸ் 1 மாணவி சரண்யா பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து சென்னை போரூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி பிளஸ்-2 மாணவி மாதவி, நாட்டுப்புற கலாசார இசை கருவி வாசித்தலில் 3-ம் பரிசு பெற்றுள்ளார். அதன்பின் திருச்சி பிஷப் ஹீபர் அரசு உதவி பெறும் பள்ளி பிளஸ்-1 மாணவர் தாரணீஷ், நாட்டுப்புற நடனத்தில் 3-ம் பரிசு பெற்றுள்ளார். மற்ற பரிசுகளை, மயிலாப்பூர் பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி, காஞ்சிபுரம் மகரிஷி சர்வதேச பள்ளி, சென்னை செங்குன்றம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளி மாணவ – மாணவியர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |