ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் மக்கள் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காபூலின் மேற்கே கடந்த வாரம் சோதனை சாவடியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் ஜைனப் என்ற 25 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே உயிரிழந்த பெண்ணின் தந்தை தனது மகளின் படுகொலைக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.