இத்தாலியில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் இரண்டும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் இத்தாலியில் புதிதாக 2,28,179 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதனால் நாட்டில் மொத்த கொரோனா பதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்து 18 ஆயிரத்து 425-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 434 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 825-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே 63,14,444 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 2,20,811 பேர் தற்போது மருத்துவமனையில் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.