புதுச்சேரியில் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் இருந்து இளம்பெண் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் .
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்,செல்வி தம்பதியருக்கு 8மாத குழந்தை இருக்கும் நிலையில் புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார் செல்வி .திருப்பூரில் பணிபுரிந்து வரும் சரவணனுடன் 17ஆம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு செல்போனில் பேசிக்கொண்டிருந்த செல்வி தனது கவனக்குறைவால் அங்கிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது .மொட்டைமாடியில் சுற்றுச்சுவர் குறைவான உயரத்தில் இருந்ததால் செல்வி தவறி விழுந்ததாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .