சீன அதிபர் ஸி ஜின்பிங் உலகம், பனிபோர் மனநிலையிலிருந்து நீங்கி அமைதி மற்றும் பரஸ்பர வெற்றியை நோக்கி நகர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்து கொண்ட சீன அதிபர் ஸி ஜின்பிங் பேசியதாவது, பிரத்யேகமான சிறிய அமைப்பு போன்று செயல்படும் சில நாடுகள் உலகை கட்டுப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், அவர் கூறியதாவது, ஆதிக்கம் மற்றும் மோதல் நிலை அதிகரித்திருக்கிறது. இது பிரச்சனைகளுக்கான முடிவை தராது என்று கூறியிருக்கிறார். அதாவது அமெரிக்கா மற்றும் சீன நாடுகளுக்கிடையில் சமீப நாட்களாக மோதல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீன அதிபர் இவ்வாறு கூறியிருக்கிறார்.