உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து மனித குலம் மீள்வதற்கு கூட்டு முயற்சிகள் தான் ஒரே வழி என்று உலக சுகாதார மன்றத்தின் உச்சி மாநாடு கூட்டத்தில் காணொளி மூலம் சீன அதிபர் கூறியுள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் உச்சிமாநாடு கூட்டம் நேற்று தொடங்கியுள்ளது. இதில் காணொளியின் மூலம் பேசிய சீன அதிபர் ஜின்பிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை வெல்வதற்கு கூட்டு முயற்சிகள் தான் ஒரே வழி என்று கூறியுள்ளார்.
மேலும் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பூசி இயக்கத்தை அதிவேகப்படுத்துவதும் அதிலிருந்து மீள்வதற்கான ஒரு சிறந்த வழி என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை நியாயமான முறையில் கொடுப்பதும் தொற்றிலிருந்து விரைவாக விடுபடுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து வளர்ந்த சில நாடுகள் கொரோனா மாபெரும் தொற்றை முன்னிட்டு கடினமான சூழலை எதிர் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர் வளருகின்ற நாடுகள் கொரோனாவை முன்னிட்டு மீண்டும் வறுமைக்கோட்டுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.