Categories
உலக செய்திகள்

இது நியாயமா….? இதற்காக பள்ளிகளை அடைக்க வேண்டுமா….? -உலக வங்கியின் கல்வி இயக்குனர்….!!!

உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்ம் சாவேத்ரா கொரோனாவிற்காக பள்ளிகளை அடைப்பது நியாயம் கிடையாது என்று கூறியிருக்கிறார்.

உலக வங்கியின் கல்வி இயக்குனர், இனிமேல் புதிதாக கொரோனா அலைகள் பரவினாலும் பள்ளிகளை அடைப்பது இறுதி நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுவது, குழந்தைகள் கல்வி கற்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை பெற்றோருக்கு உண்டாக்குகிறது.

பள்ளி வளாகங்களில் இல்லாமல் வீட்டிலேயே இணையதளத்தின் வழியாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எனினும், இது போன்ற கல்வி சூழல் தொடக்க கல்வி கற்கும் சிறுவர்களுக்கு பொருந்துமா? கற்றல் முழுமையடையுமா? என்ற அச்சம் ஏற்படுகிறது.

இந்நிலையில், கல்வித்துறையில் கொரோனா பரவலை கண்காணித்துக் கொண்டிருக்கும் உலக வங்கியின் கல்வி இயக்குனர் சேவேத்ரா, பள்ளிகள், பாதுகாப்பிற்குரிய இடம் கிடையாது  என்பதற்கும், பள்ளிகளை திறப்பது, கொரோனா தொற்றை அதிகரிக்கும் என்று கூறுவதற்கும் எந்தவித ஆதாரங்களும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.

பள்ளிகளுக்கும் கொரோனா தொற்றிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இரண்டையும்  சேர்ப்பதில் அர்த்தம் கிடையாது. கொரோனாவை காரணமாக கூறி பள்ளிகளை அடைப்பதில் எந்த நியாயமும் இல்லை. மேலும், பார்கள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றை திறந்து வைத்துக்கொண்டு, பள்ளிகளை மட்டும் அடைப்பது அர்த்தமில்லாதது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |