Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. இந்த செய்தியை யாரும் நம்பாதீங்க…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 157 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பதின் பருவத்தினருக்கான தடுப்பூசி இயக்கமானது நாடு முழுவதிலும் வேகமெடுத்து வருகிறது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கடந்த 13 நாட்களில் சுமார் 3 கோடியே 31 லட்சத்துக்கும் அதிகமான முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதனிடையில் 7 1/2 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமான பிறகு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதத்தில் 12- 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியது.

இந்நிலையில் 12 முதல் 14 வயது சிறார்களுக்கு இப்போதைக்கு தடுப்பூசி கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாக நேற்று செய்தி வெளியான நிலையில், அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது 12 முதல் 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சகம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |