Categories
தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி…. தாலி கட்டிய மனைவியை…. கணவர் உட்பட 5 பேரின் வெறிச்செயல்…. பரபரப்பு…..!!!!!

மத்தியப்பிரதேச மாநிலமான இந்தூரில் மனைவியை கணவன் உட்பட 5 பேர் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 32 வயது இளம் பெண்ணை கணவன் உட்பட 5 பேர் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, “கணவர்,அவரின் நண்பர்,வேலைக்காரன் உட்பட 5 பேர் என்னை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன் உடலில் சிகரெட்டை வைத்து சூடு போட்டு கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டியதாகவும்” அவர் கூறியுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் நவம்பர் 2019ஆம் ஆண்டு மற்றும் அக்டோபர் 2021-க்கும் இடையே நடந்தேறியதாகத் தெரிகிறது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்தப் பெண் சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், இவர் தன் கணவனான ராஜேஷ் விஸ்வகர்மாவை ‘மெட்ரிமோனியல் சைட்’மூலமாக திருமணம் செய்ததும் தெரியவந்தது. மேலும் இந்தப் பெண்ணின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவர் ராஜேஷ் விஸ்வகர்மா, அன்கீட் பகேல்,விவேக் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |