Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் கவனம் ஈர்த்த தமிழ்நாட்டு வீரர்கள்..!!

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 12ஆவது ஐபிஎல் சீசன், ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 13-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் மூன்று பேர் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

வீரர்களின் விவரம்:

கடந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழ்நாடு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியை, இந்த முறை தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 28 வயதான வருண் சக்ரவர்த்தியின் அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே அவரை வாங்க கடுமையான போட்டி நடந்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான எம். சித்தார்த்தை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது. நாகப்பட்டினத்தை சேர்ந்த 21 வயதான சித்தார்த் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

தமிழ்நாடு வீரரான சாய் கிஷோரை 2ஆவது முறையாக விடப்பட்ட ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது. சென்னையைச் சேர்ந்த 23 வயது சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் டி.என்.பி.எல்., ரஞ்சி போட்டிகளில் விளையாடிய அனுபவமுடையவர். சித்தார்த், சாய் கிஷோர் ஆகியோர் ஐ.பி.எல். போட்டியில் ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும்.

Categories

Tech |