நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடந்த 18 ஆண்டுகளாக நண்பர்களாக, தம்பதியாக, பெற்றோராக ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று நாங்கள் ஒரு மனதாக பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். எங்களின் முடிவை மதித்து, இதனை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு தனி உரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதேபோன்ற பதிவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
Categories
SHOCK: ரஜினி வீட்டில் இப்படியா?….. தமிழ் திரையுலகமே அதிர்ச்சி….!!!!
