தமிழகத்தில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய மின் வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் பல்வேறு காரணங்களுக்காக துண்டிக்கப்பட்ட 93 ஆயிரம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தையும் மறு ஆய்வு செய்ய மின் வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சட்டவிரோதமாக மின்சார இணைப்பை பயன்படுத்தி வருபவர்களிடம் 100 கோடி வரை அபராதம் வசூலிக்க வாய்ப்புள்ளது. மேலும் ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி 180 நாட்களுக்கு மேல் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் கணக்கை முடித்து, மீட்டரை அகற்ற வேண்டும் என்று மின் வாரிய தலைவர் கண்டிப்புடன் கூறியுள்ளார்.
Categories
தமிழகம் முழுவதும் இவர்களின் மின் இணைப்பை துண்டிக்க… அரசு அதிரடி உத்தரவு….!!!!
