Categories
தேனி மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் பலியான தமிழக மாணவன்…. சோகத்தில் மூழ்கிய பெற்றோர்…. ஆட்சியரிடம் கேட்ட உதவி….!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மாணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவி செய்யும்படி அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள ராசிங்கபுரத்தில் பாலசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சஷ்டிகுமார் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மகாதி நகரில் மருத்துவப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஷ்டிகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 15ஆம் தேதி லக்னோ நகரில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென சஷ்டிகுமார் நீரில் மூழ்கியுள்ளார்.

இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற காவல்துறை குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு நீரில் மூழ்கிய சஷ்டிகுமாரின் உடலை பிணமாக மீட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு காவல்துறையினர் ராசிங்கபுரத்தில் உள்ள அவரது பெற்றோரை தொடர்பு கொண்ட தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் உயிரிழந்த சஷ்டிகுமாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி செய்யும்படி மாவட்ட ஆட்சியரிடம் அவரது பெற்றோர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதனடிப்படையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மாணவரின் உடலை டேனிக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Categories

Tech |