இந்திய தூதரகம், தங்கள் நிதி உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்பட்டு வரும் வீடு கட்டித்தரும் திட்டத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு ஆயிரம் வீடுகள் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறது.
இந்திய தூதரகம் இது தொடர்பில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இலங்கையில் இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்திய நாட்டின் நிதி உதவியோடு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது வரை 4000 வீடுகள் இதன்மூலம் கட்டப்பட்டிருக்கிறது.
இத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், ஆயிரம் வீடுகள் பொங்கல் பண்டிகையன்று இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களிடம் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய தூதர் பாக்லே, இந்தியா, இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் சமூகமக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணிபுரியும் என்றும் கூறியுள்ளார்.