Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

அரசு ஊழியர்கள் முழுமையாக பணிக்கு வருவதற்கு புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில நாட்களாவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி 31ஆம் தேதி வரை 5 சதவீதம் பேர் மட்டுமே வரவேண்டும் என்றும் அரசு துறை கூட்டங்கள் நேரடியாக நடத்தவும் தடை விதித்துள்ளது.

அரசு செயலர்கள் மற்றும் அரசுத் துறையின் தலைவர்கள் முழுமையாக பணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ பிரிவு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |