Categories
உலக செய்திகள்

யூதர்களை பிடித்து வைத்த தீவிரவாதி சுட்டுக்கொலை…. என்ன நடந்தது….? வெளியான தகவல்….!!!

அமெரிக்காவில் தேவாலயத்திற்குள் நுழைந்து யூதர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதியை ஸ்வாட் பிரிவு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் கோலிவில்லே என்னும் பகுதியில் பெத் இஸ்ரேல் என்ற யூத வழிபாட்டு தலத்தில் நேற்று முன்தினம் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதி அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த யூதர்கள் 4 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த தேவாலயத்தை சுற்றி வளைத்தார்கள். அப்போது, அந்த தீவிரவாதி டெக்சாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆபியா சித்திக் என்ற பெண் தீவிரவாதியை விடுவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். சுமார் 11 மணி நேரங்களாக அந்த தீவிரவாதியிடமிருந்து அந்த நான்கு பேரை மீட்க போராட்டம் நடந்தது.

அதன்பின்பு ஒருவழியாக காவல்துறையினர் 4 பேரையும் மீட்டனர். அதாவது அந்த தீவிரவாதி பிடித்து வைத்திருந்த நான்கு பேரில் ஒருவரை மட்டுமே விடுவித்திருக்கிறார். அதன் பிறகு காவல் துறையினர், எப்பிஐ காவல்துறையினரின் ஸ்வாட் என்ற சிறப்பு படை பிரிவு, அந்த தேவாலயத்திற்குள் அதிரடியாக நுழைந்து, அந்த தீவிரவாதியை சுட்டுக்கொன்றனர். அதன் பிறகு மீதமுள்ள 3 பேரையும் மீட்டனர். தற்போது அந்த தீவிரவாதி, இங்கிலாந்தை சேர்ந்தவர் என்றும் அவரின் பெயர் மாலிக் பைசல் அக்ரம் என்றும் தெரியவந்திருக்கிறது.

Categories

Tech |