சென்னையில் வருகின்ற ஜனவரி 18 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி வடலூர் ராமலிங்க நினைவு நாள் மற்றும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகள், fl3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான சில்லரை விற்பனை விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.