Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை?…. தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் அரசு உத்தரவிட்டது. அதன்படி அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டிற்கு சுமார் 8,724 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று கூறப்பட்டது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன.

இதில் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர பணியாளர்களாக உள்ளனர். தமிழக அரசின் அகவிலைப்படி உயர்வு இவர்களுக்கு மட்டும் பொருந்தும். எனவே தினக்கூலி ஊழியர்கள் மற்றும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டு 31% ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தமிழக அரசு அரசாணையின்படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் உதவித்தொகை நிர்ணய வருமானம் பெறும் கோவில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பகுதி நேர ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள், தொகுப்பூதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பொருந்தாது. இந்த உத்தரவை கோவில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |