Categories
தேசிய செய்திகள்

கொரோனாவின் மூன்றாவது அலை…..!! மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு….!!

கொரோனா தடுப்பூசி பணிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. இது குறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, “கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகள். அரசின் தடுப்பூசி திட்டம் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது. இது உயிர்களைக் காப்பாற்றவும், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வழிவகுத்துள்ளது. தடுப்பூசிகள் மூலம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நமது தேசம் பங்களிக்க முடிந்ததைக் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. அதே நேரத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பங்கு விதிவிலக்கானது.

தொலைதூரப் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் நபர்களின் காட்சிகளைப் பார்க்கும்போது பெருமிதம் கொள்கின்றன. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் அறிவியல் அடிப்படையிலானதாகவே இருக்கும். நாட்டு மக்கள் சரியான அறிவுறுத்தல்களை பெறுவதை உறுதி செய்வதற்காக சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறோம். கொரோனா தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் தொடர்ந்து பின்பற்றி, தொற்றுநோயில் இருந்து விரைவில் கடந்து செல்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |