செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசியை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. 70 லட்சம் தடுப்பூசி இருப்பு இருக்கிறது. அதில் 11 லட்சம் கோ-வாக்சின் இருக்கு, மீதி கோவிட்ஷீல்டு. முதலமைச்சர் என்பவர் முன் களப்பணியாளர், இதுல வந்து 60 வயதை தாண்டியவர்கள், இப்ப நானும் கூட ஒரு முன்கள பணியாளர்களாக எடுத்துகொள்ளலாம்.
60 வயது தாண்டியவர்கள் பட்டியலிலும் என்னை எடுத்துக்கலாம். நான் இரண்டாவது தவணை போட்டது ஏப்ரல் 7ஆம் தேதி, ஏப்ரல் 14க்கு முன்னாடியே போட்டவர்களுக்கு இதில் தகுதி இருக்கு. அந்த வகையில் எனக்கு முன்னாலே அவர் போட்டுடாரு. அதாவது விமர்சனங்களை எதுக்காக வைக்கிறோம் என்று தெரியாமலே விமர்சிக்கின்ற ஒரு சூழல் என்பது இருந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக இந்த சமூக வலைதளங்களில் மூளை அதிகமாக மூக்குலயும், காதிலும் வழிகின்றவர்கள் இந்த மாதிரியான விமர்சனங்களை தொடர்ந்து வைத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த 11 மருத்துவ கல்லூரிகள் தான் 60%க்கு 40% . 4000 கோடியில் மத்திய அரசு 2,100 கோடி, 1900 கோடி தமிழக அரசுக்கு. இதுக்கு முன்னாடி இருந்த மருத்துவ கல்லூரிகள் எல்லாமே மாநில அரசு நிதி பங்களிப்புடன் கட்டபட்டவைகள் தான் என தெரிவித்தார்.