தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கத்தை விட இந்த ஆண்டு 10 ஆயிரம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் 75% பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி அளித்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயங்க அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் 16,709 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 12 ஆம் தேதி முதல் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலம் சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதை தொடர்ந்து இன்று முதல் 19ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நகர்புறங்களுக்கு 10,409 சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 16,709 பேருந்துகள் இயக்கப்படுகிறது.