15 குதிரை திறன் வரை உடனடியாக விவசாய மின் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்’ என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” ‘தட்கல்’ சுயநிதி திட்டத்தில் விண்ணப்பித்து, மின் பளுவிற்கு ஏற்ப உரிய திட்ட தொகையை செலுத்தி, 15 குதிரை திறன் வரை, உடனடி மின் இணைப்பு பெற்று கொள்ளலாம். 5 குதிரை திறனுக்கு 2.50 லட்சம் ரூபாயும் 7.5 குதிரை திறனுக்கு 2.75 லட்சம் ரூபாயும் 10 குதிரை திறனுக்கு 3 லட்சம் ரூபாயும் 12.5 குதிரை திறனுக்கு 3.50 லட்சம் ரூபாயும் 15 குதிரை திறனுக்கு 4 லட்சம் ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.இதுதொடர்பாக விபரங்கள் பெற, தகுந்த ஆவணங்களுடன் செயற்பொறியாளர்களை அணுகலாம்.” என அதில் கூறப்பட்டுள்ளது.