Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பென்சன் தொகை ரூ.9000 ஆக உயர்வு….!!!!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎஃப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அதனுடன் நிறுவனங்கள் கூடுதலாக தொகையை வரவு வைத்து வழங்குகிறது. இந்தத் தொகையை அவர்கள் ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் பிஎப் வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டது. இந்த வட்டி தொகை பிஎஃப் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும். பிஎஃப் கணக்குதாரர் தனக்கென நாமினியை தேர்ந்தெடுக்க வேண்டும் போன்ற புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் ஒரு பகுதியாக அமைப்புசாரா துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை 9,000 ரூபாய் ஆக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற நிலைக் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்த நிலையில் தற்போது தான் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளை EPFO அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தற்போது குறைந்த பட்ச பென்சன் தொகை 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்த உள்ளதால் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |