Categories
Uncategorized அரசியல்

2022 ஆம் ஆண்டுக்கான காமராஜர் விருது……!!! பெறப்போகும் பன்முகத் திறமைசாலி இவர்தான்….!!!

2022-ம் ஆண்டுக்கான காமராசர் விருது அனைவருக்கும் ஆனந்தனுக்கு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும், திருக்குறள் தொடர்பான தொண்டாற்றி வருபவர்களுக்கு ‛அய்யன் திருவள்ளுவர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. 2009 ஆம் ஆண்டு பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக பெங்களூரில் வசிக்கும் திருச்சியைச் சார்ந்த மு.மீனாட்சி சுந்தரத்திற்கு (வயது 78) தமிழக அரசு, 2022 ஆம் ஆண்டிற்கான ‛அய்யன் திருவள்ளுவர் விருது’ வழங்குகிறது.அதேபோன்று, காமராசருடன் இணைந்து பணியாற்றிய தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், எம்.பி., எம்எல்ஏ ஆகிய பதவிகளை வகித்தவரும், தமிழ் இலக்கியங்களில் புலமையும் பேச்சாற்றலும் மிக்கவராகவும், தமிழ் இலக்கியவாதியாகவும் சிறந்த நூல்களை படைத்தவரும் என பன்முகத் திறன் கொண்ட முனைவர் குமரி அனந்தனுக்கு (வயது 88) தமிழக அரசு, 2021 ஆம் ஆண்டிற்கான ‛பெருந்தலைவர் காமராசர் விருது’ வழங்குகிறது.

மேலும் இருவருக்கும் விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள். இவ்விருதுகள் தமிழக முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட உள்ளது.என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |