சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனா பாரபட்சமில்லாமல் பரவி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும், நிறைமாத கர்ப்பிணிகளும் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பல பெண்களும் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கொரோனா பரவுமா ? என்ற சந்தேகத்தில் உள்ளனர்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். ஆனால் இரண்டு முகக்கவசங்கள் அதற்கு முன்பு கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அதேபோல் தாய் பாலூட்டும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் குழந்தையிடம் இருந்து தனிமைப்படுத்தி கொள்ளுதல் அவசியம்.
மேலும் தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு பின்னர் பவுடர் உணவுகள் குழந்தைக்கு கொடுக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் குழந்தைக்கு தாய்பால் மூலம் கொரோனா பரவுவதும், கர்ப்பிணி தாயிடமிருந்து கருவிலேயே குழந்தைக்கு கொரோனா பரவுவதும் மிகவும் அரிதான ஒன்று என்று உலக சுகாதார அமைப்பின் நிறுவனர் டெட்ரோஸ் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் வைரஸ் இருப்பு தாய்ப்பாலில் கண்டறியப்படவில்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.