தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்தப்படத்தை புதுமுக இயக்குனரான து.ப.சரவணன் இயக்கியுள்ளார். குடியரசு தினத்தன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்துள்ளது.
அப்போது விஷால் பேசுகையில் “புதுமுக இயக்குனர்களின் படத்தில் நான் நடிக்கும் பட்சத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா தான் வேண்டும் என்று உறுதியாகக் கூறி விடுவேன். அதற்கு யுவனிடம் கூட நான் அனுமதி கேட்க மாட்டேன். ஏனென்றால் யுவன் என்னுடைய நல்ல நண்பன்” என்று கூறியுள்ளார்.