திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடித்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து கார்த்திக் நரேனின் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் மாறன். இதில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்-ல் மாறன் திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.