தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு கணிசமாக குறைந்து நிலையில் சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் படி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் தேர்வு நடக்கும் முறையே டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழக பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய தேசிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வருகிற ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது இந்த தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனாவின் 3 வது அலை பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு எழுத வரும் போது சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் தேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கெட் டிஎன்பிசி ஆன்லைனில் வெளியிட பட்டுள்ளது. இதனை தேர்வுகள் http://TNPSC.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி தேர்வு எழுத வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.