சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியும் மற்றொரு மகளும் வெளியூர் சென்றிருந்த நிலையில் தனியாக இருந்த மகளை மதுபோதையில் பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்ற சிறுமியை மிரட்டி உள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் தாய் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த தாய் மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது பெற்ற தந்தையே இந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சிறுமியின் தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தந்தை மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று கைது செய்தனர்.