Categories
தேசிய செய்திகள்

வீட்டு உபயோக மின் கட்டணம் திடீர் உயர்வு…. சற்றுமுன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வீட்டு உபயோக கட்டணம் 0-100 யூனிட் வரை ரூ ள்.1.56 இலிருந்து ரூ.1.90 ஆக உயர்த்தியுள்ளது. 101-200 யூனிட் வரை ரூ.2.60 இருந்து ரூ.2.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் குடிசைகளுக்கான மின் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

அதனை தொடர்ந்து சிறு விவசாயிகளுக்கு நிரந்தர கட்டணம் ரூ.11 இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  மற்ற விவசாயிகளுக்கு நிரந்தர கட்டடம் ரூ.50 இருந்து ரூ.75 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயரழுத்த தொழிலகத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.5.30 லிருந்து ரூ.5.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |